Search

Think

சரவணன், சென்னையில் வேலை பார்க்கும் இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று ”நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்” என்று தன் தந்தையிடம்
கேட்டான்.

அதற்கு அவர்,”இன்னும் உனக்குத்
திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன அவசரம்?” என்றார்.

இப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கி விடலாம். பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது என்றான்.

யோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில் தான் அடைக்க ஆரம்பித்து இருக்கின்றோம். திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி? என்றார்.

நமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை விற்று விட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்து விட்டு மீதம் உள்ள பணத்தில்
சென்னையில் வீடு வாங்கலாம் என்றான் அவன்.

”5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள
தொகைக்கு என்ன பண்ணுவாய்?” என்று கேட்க, மகன், அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக்கடனை மாதத் தவணை முறையில் 20 வருடத்திற்குள் செலுத்தி விடலாம்” என்றான்.

வீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு. சகல வசதிகளும் இருக்கும். அடுக்குமாடி என்றான் அவன். அவர் முகம் மாறியது.

ஆனால் மகன் ஆசைக்கேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று, வீடு வாங்கப் பணம் கொடுத்தார்.வீடு வாங்கிய பின்பு அப்பாவைச் சென்னைக்கு வாருங்கள் என்றான்.

அவரும் புதிய வீட்டைப் பார்க்க மிகுந்த
ஆசையோடு வந்து சேர்ந்தார். ஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல இடைவெளி விட்டே பார்த்துப் பழகிய மனிதர், இப்படி ஒரு வீட்டைப் பார்த்து அசந்து நின்றார். உள்ளே சென்று, 900 சதுர அடி அளவுள்ள வீட்டைப்பார்த்து, ”இதை வாங்கவா நமக்குச் சோறு போட்ட நிலத்தை விற்கச் சொன்னாய்?” என்றார்.

”இது எல்லாம் உங்களுக்கு புரியாது இங்கே அப்படித்தான். என்னோட லைப் சென்னையில் தான். இனிமேல்
நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும்
தான் வரப்போறேன். இங்கே தனி வீடு எல்லாம் வாங்க முடியாது. அதுக்கு கோடிக் கணக்கில் பணம் வேண்டும். பேசாம தூங்குங்க! வந்தது அசதியா இருக்கும்” என்றான்.

மனம் கேட்காமல், மனதில் வருத்தத்துடன் அவரும் அன்று உறங்கிவிட்டார்.

மாலை வேளை வீட்டை விட்டு வெளியே வந்தார். மற்ற வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன.
கீழே இறங்கி வந்தவர், சில பெற்றோர்கள் தங்கள் சிறு குழந்தைகளைப் பூங்காவில் விளையாட வைத்து கொண்டு இருந்ததைப் பார்த்தார். அவருக்கு மனதில் ஒரு சந்தோஷம். அதைப்பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார்.

பக்கத்தில் வந்த செக்யூரிட்டி,” அய்யா நீங்க சரவணன் சார் அப்பாவா?” என்றான். ஆமாம் என்றார்.

”சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார் டீ சாப்பிடலாம்” என்றான்.
சரி என்று நகரும் போது, “ஏனப்பா இங்கே யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா?
எல்லாம் வீடும் பூட்டியிருக்கு? சில வீடுகளின் கதவு அடைத்திருக்கு?”

அது எல்லாம் அப்படித்தான் அய்யா. எல்லோருக்கும் நிறைய வேலை. காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும். பல வீட்ல கணவன், மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. அவுங்க சின்னப் பசங்களை பக்கத்துல இருக்கற
ஹோம்ல விட்ருவாங்க. நைட்ல யாரு முதல்ல வராங்களோ அவுங்க கூட்டிட்டு வருவாங்க. பெத்த புள்ளையை யாருகிட்டயோ விட்டு விட்டுப்போவார்கள்!”

”ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் இங்க வந்து உடன் தங்கியிருக்க மாட்டார்களா?”

”அதுவா இவங்க இருக்கிற பிஸியில,
பெத்தவுங்களப் பார்த்துக் கொள்ள முடியுமா? அதனால ஒண்ணு அவங்க சொந்த ஊர்லயே இருப்பாங்க! அல்லது இவங்க அவங்களை முதியோர் இல்லத்தில சேர்த்து விட்டுருவாங்க!”

இதைக் கேட்ட ஆச்சிரியத்தில் பெரியவர் நின்று கொண்டு இருக்க அவன் தொடர்ந்து சொன்னான், “
இதோ போறாரே சேகர் சார், அவர் உங்க வீட்டுக்கு எதிர்த்த வீடுதான். இப்போ கூட இவர் தன் பையனை சைல்ட் கேர் ஹோமிலிருந்துதான்
கூட்டிகிட்டு வர்றாரு!.

திகைத்துப் போனார் பெரியவர்.

தான் மகனிடம் எதுவும் கேட்காமல் ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு இருந்தவர், ஒரு நாள் மாலை, கீழே நின்று கொண்டு இருக்கும் போது ..
பக்கத்தில் வந்த சேகரைப் பார்த்தார்.
”என்ன தம்பி ஆச்சரியமா இருக்கே?
இன்னக்கி வேலை இல்லையா?”

“இல்லை அய்யா. லீவ் போட்டுட்டேன்..
எதுவுமே பிடிக்கலே. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு!”

”ஓஹோ, சரி சரி! எங்கே உங்கள் மனைவி?”

”அவளுக்கு செகன்ட் ஷிபிட். வர நைட் 12 மணி ஆகும். அதுவரைக்கும் நான் பையனைப் பார்த்துக்குவேன். அப்புறம் காலையில நான் வேலைக்கு போயிருவேன். அவ வீட்டு வேலையையெல்லாம்
முடிச்சுட்டு பையனைப் பக்கத்துக்கு ஹோம்ல விட்டுட்டு வேலைக்கு போய்விடுவா”

”அப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டிங்களா?”
.
”சண்டே மட்டும்தான் பேச முடியும் அதுவம் அவளுக்கு மூன்றாவது ஷிபிட் நைட் 10 மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா. அப்போ ஒரே தூக்கம் தான். அன்று சாய்ந்திரம்
ஏதாவது ஹோட்டலுக்குப் போய்
சாப்பிட்டு விட்டு வருவோம்”

”எதற்குத் தம்பி இப்படிக் கஷ்டப்படணும்?”

”அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்”

அவன் முத்தாய்ப்பாய் இதைச் சொன்னான்.

அதற்கு அந்த பெரியவர், “நீங்க சொல்றது தப்பு. இப்படி இருந்தாத்தான் வசதியா வாழ முடியும்
அப்படீன்னு சொல்லுங்க!” என்றார்.

அதை கேட்டவுடன் அவனுக்கு செவிட்டில் அறைந்தது போல இருந்தது.

அடுத்த நாள் தான் மகனிடம் நான்
ஊருக்கு போறேன் என்றார் பெரியவர்.

”என்ன அப்பா இவ்வளவு அவசரம்?
என்று கேட்டவனுக்கு அவர் பதில் உரைத்தார்:

”ஒண்ணும் இல்லை. படிச்சா நல்லா இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் கடன் வாங்கி உன்னை நான்
படிக்க வச்சேன். ஆனா நீ இன்னும் உன் வாழ்கையையே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள
அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் ஆயிட்டியே!.

இனிமே உனக்கு கல்யாணம் பண்ண,
அவளுக்கும் அப்புறம் உன் குழந்தைக்கும் சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும்.

கடைசியா படிப்பு உன்னை ஒரு கடன்
காரனாகத்தான் ஆக்கும். இது தெருந்திருந்தால் உன்னை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன்.

விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உன் படிப்பைத் தவிர வேறு எதற்கும் கடன் வாங்கவில்லை.

இனிமே உன் வாழ்கைக்கையில்
நிம்மதியே இருக்காது என்பதை நினைக்கும்போது கஷ்டமா இருக்கு!

மீண்டும் திரும்பி வருவாய் என்று நம்பிக்கையுடன் கிளம்புகிறேன்” என்று தனது கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் அவர்.

அவருக்கு எப்படித் தெரியும் இந்த
சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது.
எக்ஸிட் கிடையாதுஎன்று!!!!!!!!!!!!

குறிப்பு:

இது சென்னைவாசிகளுக்கு மட்டுமல்ல, சொந்த ஊரைவிட்டு பிழைப்பு தேடி ஓடி உலகின் எங்கெங்கோ மாட்டிக்கொண்ட அனைவருக்கும் பொருந்தும்
.
படிக்க_மட்டுமல்ல
சிந்திக்கவும்_அவசியம்

Info

*ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது*
A
1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது .

2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது .
உடனே வெளியே எரிந்து விட வேண்டும் .

3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் சொறியக் கூடாது

4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிக்க கூடாது .

5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது .

6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது

7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது .

8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது .

9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத்துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது .

*பெண்கள்_தெரிந்து_கொள்ள_வேண்டியது …*

1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிàaqந்து கொள்ள வேண்டும்.

2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது)

3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது .

4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.

5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

6. தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும் .

7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது

8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது,அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் )பாதிப்பு அடையும் .

9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போககூடாது .

10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளகூடாது

11. அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

ஆன்மீக பதிவில்– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Deeply saddened and regret to inform that Janab Syed J Inayathullah Saheb

Assalamualaikum
Deeply saddened and regret to inform that Janab Syed J Inayathullah Saheb
President: Indian National League
President: Baitulmal Tamilnadu-Triplicane
President: All India Mill Council-TN
Passed away at about 11PM.

Inna lillahi wa Inna ilaihi rajioon

The body is at his residence:

Newry Park Tower, Flat # 1202,
9, Anna Nagar West Extn. Chennai-600101

His Janaza Prayers and burial at Nandanam Mosque after Zohar Namaz at about 1pm

திமுக வின் தற்போதைய தலைவர் ஸ்டாலின்அவர்களுக்கு

திமுக வின் தற்போதைய தலைவர் ஸ்டாலின்அவர்களுக்கு

ஓர் சராசரி மனிதனின் உளக்குமுரல்

முஸ்லிம்கள் சார்பாக ஒன்றை சொல்லிக்கொள்கிறோம்
தாங்களின் இன்றைய தேர்தல் அறிக்கையை கண்டோம்
அதில் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து சொல்லியுள்ளீர்கள் சந்தோசம்

ஆனால் அதே நேரம் உங்கள் தகப்பனார் (கலைஞரால்)கைது செய்யப்பட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக (குற்றவாளிகளாக அல்ல) விசாரணை கைதிகளாகவே உள்ள முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்து ஒரு வார்த்தைகள் கூட இல்லை என்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனையளிக்கிறது

முஸ்லிம்களின் பாஸிஸ பா ஜ க எதிர்ப்பலைகளை தனக்கு சாதகமாக்கி வென்றுவிடலாம் என எண்ணுகிறீர்கள்

உங்கள் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு சீட் கொடுக்காதது கூட எங்களுக்கு பெரிய கவலை அளிக்கவில்லை
அவர்களுக்கு சீட் இச்சமூகத்துக்கு ஒரு பலனும் இல்லை என்பதை இந்த சமுதாயம் தெளிவாக விளங்கியே வைத்திருக்கிறது ஆனால்
தேர்தல் அறிக்கையில் உங்கள்தகப்பன்(கலைஞரால்) சிறைக்கு அனுப்பப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக (குற்றவாளிகளாக அல்ல)விசாரணை கைதிகளாகவே இருக்க கூடிய முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டால் காவிகளுடன் கள்ளக்கூட்டு வைக்க முடியாது என்கிற உங்களின் சுயரூபத்தை முஸ்லிம் சமூகம் உணராமல் இல்லை

இருந்தாலும் இச்சமூகம் இத்தேர்தலில் (சில தொகுதிகளை தவிர்த்து)
உங்களை ஆதரிக்கவே செய்யும் ஏன் தெரியுமா ?

பாஸிஸம் வீழ்த்தப்பட வேண்டும் இந்திய தேசம் அமைதியுற வேண்டும் இந்த காவி ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக

இறைவனின் நாட்டத்தால் ஒருகால் உங்களுடைய கூட்டனி வெற்றிபெற்று மத்தியில் ஆட்சிமாற்றம் வந்து அதன்பிறகும் விசாரணை கைதிகளாக உள்ள முஸ்லிம் சிறைவாசிகள் குறித்தோ சிறுபான்மையர் மற்ற நலன்கள் குறித்தோ வாய்திறக்காமல் இருந்தீர்கள் என்றால் உங்களுடைய முதல்வர் கனவு இறுதிவரை காணல் நீராகவே போகும் என்பதை முஸ்லிம் சமூகத்தின் சார்பில் அடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன்

மனிதர்களின் சூழ்ச்சியைவிட எம் இறைவனின் சூழ்ச்சி மிக வலிமைவாய்ந்ததுஇச்சமூகம் வானைநோக்கி கையை உயர்த்தினால் அந்த வல்ல(அல்லாஹ்) இறைவனின் பிடி மிகக்கடுமையாக இருக்கும் என்பதையும் எச்சரிக்கிறோம்

மாயவரம் :புஹாரி
ஸ்டாலின் கவனத்திற்கு செல்லும்வரை பகிரவும்

Liked

படித்ததில் ரசித்தது….. 😊👌😎

வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி.
காளைக்கு கஷ்டந்தெரியக்கூடாதென்பதற்காக
அதனுடன் பேசிக்கொண்டே உழுதார்.

மாடு நீ.. முன்னால போற. மனுஷன் நான்.. பின்னால வர்றேன். பாத்தியா..! இதான் என் தலையெழுத்து. விவாசயத்தொழில்லநீதான் முன்னாடி நான் பின்னாடிதான்.
முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னார்.

அடடா.. இந்த மனிதஜாதிதான் எவ்வளவு மேலானது
என்று நினைத்து சிலிர்த்துப்போனது காளை.

விவசாயி தொடர்ந்தார்.
நீயும் நானும் இந்த விவசாயத்தில் கூட்டாளி.

அதனால வர்ற விளைச்சல்ல உனக்கு பாதி எனக்கு பாதி.

காளைக்கு தலைச்சுற்றியது.எவ்வளவு நேர்மை..!
பாதிக்குப்பாதி பங்குதர யாருக்கு மனசுவரும்..!

பாதிப்பாதின்னா எப்படி பங்குவைக்கலாம்?நீ முன்னால போறதால முன்னால கிடைக்குறது உனக்கு. பின்னால கிடைக்குறது எனக்கு. சரியா? என்றார் விவசாயி.

முன்னால வர்றது எல்லாமே எனக்கா..!
பெருமிதமாய் பார்த்தது காளை.

விதைவிதைத்து
நாற்றுநட்டு சிலகாலத்தில் பச்சைப்பசேலென்று மாறியிருந்தது வயல்.
மாட்டுக்கு வாயெல்லாம் எச்சில்.
விவசாயியை பார்த்தது.

முதல்ல வந்த இதெல்லாம் உனக்கு.
இதுல அப்புறமா ஒன்னு வரும்.
அதுமட்டும் எனக்கு.
சரியென்று தலையாட்டியது காளை.

கொஞ்சநாட்களில் நெற்கதிர்கள் குதிரைவால்போல
விளைந்து தரைபார்த்துக்கிடந்தன.

அறுவடைநாள் வந்தது.
முதலில் வந்த வைக்கோல் காளைக்கு.
பின்னர்வந்த நெல் விவசாயிக்கு.

மாடு கோர்ட்டுக்கா போகமுடியும்..?
பாகப்பிரிவினையில் அநீதியுள்ளதென்று பரிதாபமாய் பார்த்தது காளை.
கவலைப்படாதே நெல்லிலும் பங்குதர்றேன்.
அதிலும் நமக்கு பாதிப்பாதி.
சோகத்துடன் தலையாட்டியது காளை.

நெல்லை உலரவைத்து
அரைத்துப்புடைத்ததும்
உமியும் தவிடும் முன்னால் வந்தது.
அது காளைக்கு.
பின்னால்வந்த முத்துமுத்தான அரிசி முழுமையும் மனிதனுக்கு.
இந்த பங்கீட்டிலும் நியாயமில்லையென்று கண்ணீர்விட்டது காளை.

அழுவாதே.இந்த அரிசியிலும் உனக்கு பாதி எனக்கு பாதி.
.. சரியா? என்றார்
விவசாயி.

அதற்கும் சரியென்று தலையாட்டிய அந்த வாயில்லா ஜீவன்,
அரிசியை நோக்கிச்சென்றது.

பொறு.,,,,அரிசியை சோறாக்கி, அதில் முதலில் வருவது உனக்குதான்.
அடுத்துவருவதுதான் எனக்கு.
சோகத்துடன் தலையாட்டியது காளை.

அரிசியை சோறாக்கி வடித்தபோது
முதலில் வந்த சோற்றுக்கஞ்சி காளைக்கு.
அடுத்துவந்த சோறு மனிதனுக்கு.
காளை முரண்டுபிடித்தது.

இந்தமுறை,
முன்னால மனிதனுக்கு
பின்னால மாட்டுக்கு என்று ஒப்பந்தத்தை மாற்றும்படி கெஞ்சியழுதது.

சரியென்று ஏற்றுக்கொண்ட விவசாயி அப்படியே செய்தார்.
பொங்கல் திருவிழா வந்தது.

முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.
அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்…😅🙏👍

தெரு நாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு…

தெரு நாய் என சித்தரிக்கப்பட்ட நம் நாட்டு நாய்கள் பற்றிய ஒரு தொகுப்பு…
===============================================================

“நாட்டு நாய்கள் மிகவும் நன்றி கொண்டவை. நாம் என்றாவது ஒரு நாள் உணவு போட்டுவிட்டு, பின்பு கல்லால் அடித்தால்கூட நம்மை பார்த்ததும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும். பட்டி நாய்கள் எனப்படும் நாட்டு நாய்களிடம், வெளிநாட்டு நாய்களிடம் இல்லாத பல்வேறு விசேஷ குணங்கள் இருக்கின்றன..” என்கிறார், நாட்டு இன நாய் ஆய்வாளர் பொன் தீபங்கர். இவருக்கு 29 வயது. டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் கற்றுவிட்டு ஈரோடு வந்திருக்கும் இவர், இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் விவசாயம், நாட்டு இன நாய்கள் போன்ற விஷயங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

*நாட்டு இன நாய்கள் பற்றி அவர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:*

“எனது சிறுவயது பருவத்தில், எங்கள் தோட்டத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாக்க ராஜபாளையம் நாய் இருந்தது. அது நாம் சிந்தும் உணவை மட்டுமே சாப்பிட்டாலும் நம்மையே சுற்றி வரும். நம்மை மீறி நமது வீட்டிற்குள் நுழையாது. தோட்டத்துக்குள் எங்கேனும் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டால் பதிலுக்கு முதல் குரல் அந்த நாயிடம் இருந்துதான் எழும்.

தமிழகத்தில் ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவோம். அந்த பட்டியை பாதுகாக்கும் நாய்கள்தான் அந்த காலத்தில் பட்டிநாய்கள் என்று அழைக்கப்பட்டன. மலையாள மொழியில் நாய்களை பட்டி என்று அழைப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம்.

எனக்கு தெரிந்தவரை பட்டி நாய்களில் கருவாய் செவலை, கருநாய், பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்திருக்கின்றன. உடல் முழுக்க செவலையும் வாய் பகுதி கருப்பாகவும் இருக்கும் கருவாய் செவலை அதிக மவுசாக இருந்திருக்கிறது. இது காவலுக்காகவும், செல்லப்பிராணியாகவும் வளர்க்கப்பட்டிருக்கிறது.

கருநாய் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் இருக்கும். பட்டிகளில் காவல் காக்க இந்த நாய்கள்தான் மிகச்சிறந்தவை. இருளோடு இருளாக இந்த நாய்கள் படுத்து இருந்தால் பிற மிருகங்களுக்கு காவல் நாய் இருப்பது தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும்.

பச்ச நாய் என்றால் துரத்தித்துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்த நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாரும் செல்ல முடியாது. பாய்ந்து வந்து கடித்து விடும். இதுபோன்று வேறு சில நாட்டு இன நாய்களும் இருந்துள்ளன.

ஆனால் இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால் *நம் நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெரு நாய்களாக்கி விட்டோம்.*

நமது விவசாய நிலங்களில் நச்சுப்பாம்புகளும், தேள்களும், வேறு பல விஷ ஜந்துகளும் உள்ளன. இவற்றில் இருந்து விவசாயிகளை பெரிதளவும் காத்து வந்திருப்பவை பட்டி நாய்கள்தான். முன்பு விவசாயிகள் தங்கள் தோட்டத்துக்கு செல்லும்போது பட்டி நாய்கள் அவர்களுக்கு முன்னால் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால் அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை விவசாயிகள் உணர்ந்து, தங்களை காத்துக்கொள்வார்கள். எல்லா விதமான விஷ ஜந்துக்களையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே அணுக விடாமல் பார்த்துக்கொள்ளும். அதுபோலவே மாட்டுப்பட்டிகளை காவல் காக்கும் இந்த நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக் கொள்ளும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு உயர் போலீஸ் அதிகாரி இருந்தார். அவருடைய மனைவிக்கு வெளிநாட்டு நாய்கள் மீது கொள்ளை பிரியம். வீட்டில் 14 நாய்கள் வளர்த்து வந்தார். அந்த நாய்களுடன் ஒரே ஒரு நாட்டு நாயை, அந்த அதிகாரி விரும்பி வளர்த்து வந்தார். ஆனால் அந்த நாயை அவருடைய மனைவிக்கு கொஞ்சமும் பிடிக்காது.

ஒருநாள் இரவில் அவரது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து விட்டனர். நாட்டு நாயுடன் சேர்த்து 15 நாய்களும் சுற்றிக்கொண்டன. திருடர்கள் சாமர்த்தியமாக மயக்க பிஸ்கெட்டை தூக்கி வீசினார்கள். அனைத்து நாய்களும் ஓடிச்சென்று பிஸ்கெட்டுகளை தின்று விட்டு சாப்பிட சிறிது நேரத்திலேயே மயங்கி விட, திருடர்கள் போட்ட பிஸ்கெட்டை சாப்பிடாத நாட்டுநாய் பாய்ந்து அவர்களை தாக்கியது. இதில் நிலை தடுமாறிய திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். நாயின் குரைப்பு சத்தம்கேட்டு அந்த அதிகாரி வெளியே வந்து பார்த்தபோது வெளிநாட்டு நாய்கள் மயக்கத்தில் கிடந்தன. நாட்டு நாய் மட்டுமே கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. காரணம், *நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவுகளை உண்பதில்லை.*

வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன் பட்டி நாய்களிடம் உண்டு.

*இப்போது தெரு நாய்களாக்கப் பட்ட பின்பு கூட, அந்த வீதியில் தினமும் வந்து செல்பவர்களை தவிர இரவு நேரத்தில் புதிய நபர் ஒருவர் வந்தால் அதை பார்த்ததும் நாட்டு நாய் உடனடியாக குரைக்கும்.*

அதைத்தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கி தகவலை பரப்பும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு. வேட்டிக்கட்டிக்கொண்டு செல்லும் நபர்களை பார்த்து பெரும்பாலும் நமது பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும்.

*இன்று நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் நோய்கள் உருவாகும். தொற்று நோய்கள் பரவும்.* குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்கவும் வேண்டும். ஆனால், வெப்ப நாடுகளின் காலநிலைக்கு தகுந்தாற்போல *நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை நோயால் பாதிக்கப்பட்டால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று செத்துவிடும் அறிவாற்றல் கொண்டது.*

*கிராமங்களில் நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல்நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய் தனது உயிரைக்கொடுத்து காப்பாற்றும் என்பார்கள்.*
எனவேதான் காலபைரவரின் வாகனமாக பட்டி நாய் அமைக்கப்பட்டு உள்ளது.

பட்டி நாய்களை சற்று உற்றுநோக்கி கவனியுங்கள். அது ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும். சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டைவிட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால் குரைத்து மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம், முன்பு பட்டியில் இருந்து தொலைந்து போகும் கன்றுகளை, பட்டி நாய்கள்தான் தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்க்கும். கால்நடைகளுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் நாட்டு நாய்கள் காவல் அரணாகும்.

நமது கலாசாரத்தோடும், வாழ்வியல் ஆதாரங்களோடும் பின்னிப் பிணைந்த பட்டி நாய்களை பாதுகாப்பது நம் சமூக கடமை” என்கிறார், ஆய்வாளர் பொன் தீபங்கர்.

தேள் மற்றும் விஷ பூச்சிகளை பட்டி நாய்கள் எந்த பயமுமின்றி கடித்து தின்றுவிடும். பாம்புகளையும் எதிர்த்து நின்று கடித்து விரட்டும். *நாட்டு நாய்கள் விஷப்பாம்புகளையும் கடித்து கொல்லும் ஆற்றல் கொண்டவை மட்டுமல்ல, பாம்புகள் கடித்தாலும் அவற்றுக்கு எளிதில் மரணம் ஏற்படாது.*

ஏன் என்றால் உடனே அதற்குரிய பச்சிலையை தேடிச் சென்று கடித்து தின்றுவிட்டு, தரையில் மல்லாந்து படுத்துக்கொள்ளும். யோகாசனத்தில் சவாசனம் என்பார்களே அதுபோல எந்த அசைவும் இல்லாமல் சில மணி நேரம் கிடக்கும். நாம் பார்த்தால் கூட அது செத்து விட்டதோ என்று தான் தோன்றும். அருகில் சென்று பார்த்தால்தான் அதன் உடல் அசைவு தெரியும். ஏன் அது அப்படி கிடக்கிறது என்றால், பாம்பின் விஷம் தலைக்கு ஏறி மூளையில் கலந்து விட்டால் உயிரிழப்பு ஏற்பட்டு விடும்.

எனவேதான் அறிவுள்ள அந்த நாய்கள் சவாசனம்போல படுத்துக்கொள்கின்றன. அப்படி படுத்துக்கொள்ளும்போது, ரத்தம் இயற்கையாகவே சிறுநீரகத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விஷம் சிறுநீராக வெளியேறும். சிறுநீர் வெளியேறியதும் எந்த பிரச்சினையும் இல்லாமல் அது தொடர்ந்து தனது காவல் பணியை செய்யும்… தகவல் மூர்த்தி.

Laws

Hilarious Laws which you have not studied in school:

💮 Law of equality :
The time taken by the wife, when she says I’ll get ready in 5 minutes, is exactly equal to the time taken by husband when he says ‘I’ll call you in 5 minutes!
➖➖➖➖➖➖➖➖
💮 Law of Queue:
If you change queues, the one you have left will start to move faster than the one you were in.
➖➖➖➖➖➖➖➖
💮 Law of Telephone:
When you dial a wrong number, you never get a busy tone.😅
➖➖➖➖➖➖➖➖
💮 Law of Mechanical Repair:
After your hands become coated with grease, your nose will begin to itch.
➖➖➖➖➖➖➖➖
💮 Law of the Workshop:
Any tool, when dropped, will roll to the least accessible corner.😐
➖➖➖➖➖➖➖➖
💮Bath Theorem:
When the body is immersed in water, the telephone rings.
➖➖➖➖➖➖➖➖
💮 Law of Encounters:
The probability of meeting someone you know increases when you are with someone you don’t want to be seen with.
➖➖➖➖➖➖➖➖
💮 Law of the Result:
When you try to prove to someone that a machine won’t work, it will.
➖➖➖➖➖➖➖➖
💮 Law of Bio mechanics:
The severity of the itch is inversely proportional to the reach.
➖➖➖➖➖➖➖➖
💮 Theatre Rule:
People with the seats at the farthest from the entry arrive last. 😅
➖➖➖➖➖➖➖➖
💮 Law of Coffee:
As soon as you sit down for a cup of hot coffee, your boss will ask you to do something which will
last until the coffee is cold. 😩
➖➖➖➖➖➖➖➖
💮 Law of Proposal :
After you accept a proposal, you will get a better one…😜
➖➖➖➖➖➖➖➖➖
💮 Law of getting late:
When you reach early for something, it will never start on time😜😉
➖➖➖➖➖➖➖➖➖
💮 Law of exam:
If you didn’t read a page which is of least importance, first question will be from that page only. 😜😜😝
➖➖➖➖➖➖➖➖➖

Alagu

**அழகு**
*எது*
*??????????????????*

என் மனம் நீண்ட நாட்களாக *விடை தேடிய ஒரு கேள்வி*

*அனுபவம் கூறிய. விடை*

*அழகானவர்களை நாம் அனைவரும் ரசிக்கிறோம்*

*அழகாக இருக்க* நாம் ஆசைப்படுகிறோம்;

அழகாக இல்லையெனும் *ஒற்றைக் காரணத்துக்காக பலரை ஒதுக்குகிறோம்*;

அழகு என்று நம்மை *பிறர் ஏற்காவிடில், மனம் வாடிவிடுகிறோம்*.

எது அழகு ?

சிவந்த நிறமா?

கூறான மூக்கா?

வேல்போன்ற விழிகளா?

வனப்பான உடல் அமைப்பா?

வண்ண,வண்ண உடைகளா?

வித விதமான சிகை அலங்காரங்களா?

விலை உயர்வான நகை அலங்காரங்களா?

இவைகளெல்லாம் அழகுதான்.

*ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல*

குழந்தைகளை அன்போடும், பண்போடும் அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் அழகு.

அப்பெற்றோர்களை *வயதான காலத்தில் பேணிக்காக்கும் பிள்ளைகள்* அழகு.

மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு.

கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு.

பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு.

*நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையுடன்* கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு.

செய்யும் தொழிலை திறமையுடன் செய்பவர்கள் அழகு.

தொழிலில் *அறத்தையும், நேர்மையையும் இரு கண்களாகப்* போற்றுபவர்கள் அழகு.

*கையூட்டு வாங்காத கைகளுக்குச்* சொந்தக்ககார்ர்கள் அழகு.

பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு.

*பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்கார்ர்கள் அழகு.*

சாலைகளில் விபத்து நேராவண்ணம் பொறுப்புடன் வண்டி ஓட்டுபவர்கள் அழகு.

*பிறர் துன்பம் கண்டால் கலங்கும் கண்கள் அழகு.*

அத்துன்பத்தைக் *களைந்திட விரையும் கரங்கள் அழகு.*

சமுதாய மேம்பாட்டிற்கு *உழைக்கும் மனிதர்கள் யாவரும் அழகு.*

பணிவாக இருக்கும் பண்பாளர்கள் யாவரும் அழகு.

*மலர்ந்த முகமும், இனிய சொல்லும் கொண்ட மாந்தர்கள்* எப்போதும் அழகு.

இதன்படி வாழும் மாந்தர்களா நீங்கள் ? உணர்ந்து கொள்ளுங்கள்.

*நீங்கள்தான் உண்மையிலேயே அழகு.*

Info

🔔🌷இரண்டு அவன் இன்னருள் (திருமந்திரம்) என அறக்கருணை (அனுகிரகம்), மறக்கருணை (சங்காரம்) என்ற இரண்டு வகையான கருணை பொழியும் சிவ வடிவங்கள் 💥 ☘8.பஞ்சானன், ஐந்து முக ஆகமேசுவரன் – தெற்கே இலங்கைக்கு அப்பால் கன்னி,குமரி,காவிரி முதலிய ஒன்பது நதிகளும் ஏழு மலைகளும் கொண்ட மகேந்திரமலை என்ற தலத்தில் ஐந்து முகங்களால் எண்ணற்ற ஆகமங்களையும் அறுபத்தாறு முனிவர்க்கு இருபத்தெட்டு ஆகமங்களையும் ஓதிய முகஞ்சோதரர். .முத்தமிழ்வேதம் (திருமூலர்), முத்தமிழ் நான்மறை (கல்லாடர்), செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர் (சம்பந்தர்) என தமிழை வெறுத்த சமணர் தமிழில் இருந்த வேத ஆகமங்களை அழித்ததால் சமசுகிருதத்தில் உள்ள வேத ஆகமங்களே பயன்படுத்தப்படலாயின.
🌈9.தட்சிணா மூர்த்தி (தென்னன்) – இலங்கைக்குஅப்பால் மகேந்திரமலை என்ற திருத் தலத்திலும் வடக்கே சோனகரில் (ரசியா) சரசுவதி நதிக் கரைத் தலத்திலும் விழுது இல்லாத அரிய வகை ஆலமரமான கல்லால நிழலில் தென் திசையில் அமர்ந்து உலகம் முழுவதும் இருந்த தமிழ் ஆரியம் (சமசுகிருதம்) ஆகிய இரண்டு மொழிகளில் நான்கு வேதங்களும், மதுரையில் நான்கு முனிவர்களுக்கு மௌனத்தால் வேதப் பொருளும் உரைத்த தென்திசை வடிவம்.தட்சிணாமூர்த்தியும் நடராசர் போல் முயலகன் என்ற சிவ கணம் மீது வைத்த திருவடியும், அக்கினியும் உடுக்கையும் உடையவர். தென்திசைத் தட்சிணாமூர்த்தி வடிவம் தற்காலத்தில் தென் திசை நோக்கி வடதிசையில் அமரும் உத்தரா மூர்த்தியாக உள்ளது. ஊழி முடிவில் உலகங்களும் உடல்களும் அழிந்த பின் உயிர்களுக்கு வீணை வாசித்து இன்பம் அருள்பவர் வீணாதர தட்சிணா மூர்த்தி. காமனை எரித்தவர் யோக தட்சிணா மூர்த்தி.
🌹10.சட்டைநாதர்– பல ஊழிகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒருவிசுணுவின் தோலை உரித்துச் சட்டையாக அணிந்து அருளியவர். சீர்காழி மயிலாடுதுறை திருவெண்காடு மற்றும் சில தலங்களில் சட்டைநாதர் உள்ளார்.
🙏11.கங்காளர் – ஊழி முடிவில் அரி அயன் முதலிய தெய்வங்கள் இறந்த பின் அவர்களது எலும்புகளை அணிந்து முக்திஅருள்பவர். தெய்வங்களின் கபாலங்களை (மண்டைவோடு) திருமுடியில் மாலையாக அணிபவர் கபாலீசுவரர். விண்மீன் போல் கபால மாலை (தலை மாலை) இருப்பதைத் திருவாசகம் காட்டுகிறது
🔥12.திரிபுராரி,பேரெயில்முறுவலார்– கணபதி பிறப்பதற்கு முன், பல ஊழிகளுக்கு முன் தேவ தேவியர் தேராக பிரம்மன் சாரதியாக,விசுணு அம்பாகப் பணி புரிய மலையை வில்லாக வளைத்த வில்லாளி. அனைவரும் தானே முக்கியம் என்று இறுமாந்த போது பரமன் புன்னகை புரிந்து தேரில் திருவடியை வைத்த அளவில் தேர் அச்சு முறிந்து விழுந்தது, புன்னகைத்தீப்பொறியால் முப்புரம் எரிந்து விழுந்தன. (விழுப்புரம்,அதிகை). எல்லோர் ஆணவமும் எரிந்து சாம்பலானது. முப்புரமாவது மும்மல காரியம் அப்புரம் எரிந்தமை என்றார் திருமூலர்.
🕉13.காளை வாகனர் – ஈசன் முப்புரம் எரித்த போது காளையாகிப் பணி புரிந்த அந்த ஊழி விசுணுவிற்கு அருளிக் காளையையே வாகனமாகக்கொண்டவர். இந்த ஊழியில் காளையாகிப் பணி புரிபவர் தரும தேவராகிய நந்தி.
🍁14.முக்கண்ணன், திரிலோச்சனன் – சூரிய சந்திரர்களுக்கு ஒளி வழங்கும் ஈசனது திருக் கண்களைப் பராசக்தி கைகளால் விளையாட்டாய் மூடிய போது நெற்றியில் சுடர் விழியைத் தோற்றுவித்து உலகங்களுக்கு ஒளி வழங்கிப் பாதுகாத்தருளிய முச்சுடர் விழியன், நெற்றிக் கண்ணன். நெற்றிக்கண் பொறியிலிருந்து வீர பத்திரரைப் படைத்து தட்சனது மருள் யாகம் முடித்த கண்ணுதல். நெற்றிக்கண் பொறியால் மன்மதனை எரித்தயோக தட்சிணா மூர்த்தி, காம தகனர். ஐந்து முகங்களுடன் ஆறாவதாக அதோமுகம் கொண்டு ஆறு நெற்றிக்கண் பொறியிலிருந்து ஆறு குழந்தைகளைப் படைத்தருளி ஆறுமுகனை உருவாக்கியவர். உலகங்கள் இருண்ட போது தோன்றிய இருள்அசுரன் ஆன அந்தகாசுரனைத் திரிசூலத்தில் கோத்து முக்தி அருளியவர் சூலபாணி. வெண்மையான மழு (கோடரி) ஏந்தியவர் மழுவாடீசுவரர்
💥15. அட்டமூர்த்தி – நிலம் நீர் நெருப்பு வாயு வானம் சூரியன் சந்திரன் ஆத்மா ஆகிய எட்டாகவும் ஒருசேர இருக்கும் ஈசன்
🌸16. மகா பைரவர், வடுக நாதர் – ஆறு கரமும் நாய் வாகனமும் உடைய பைரவரைப் படைத்து இந்த ஊழிக் கால பிரம்மனது 5 ஆம் சிரம் கொய்த திருக் கண்டியூரீசர்.
🌻17.ஐசுவர்யேசுவரர்– சங்க நிதி பதுமநிதி என்ற இரண்டு பெரிய அட்சய ஐசுவரியங்களைக் குபேரனுக்கும் லட்சுமிக்கும் அருளிச் செய்து முறையே செல்வத்தின் தேவனாகவும் தெய்வமாகவும் ஆக்கியவர்.(நாள் அட்சய திரிதியை)
🍀18.ஊர்த்துவத்தாண்டவர் -தட்ச யாகம் அழித்த பின் கண்ணில் பட்ட எல்லோரையும் காளி கொன்ற போது எந்த ஆண் பெண் தெய்வங்களாலும் ஆட முடியாத அரிய வகை நடனத்தை, கால் பெருவிரலைக் காது வரை உயர்த்தி ஆடும் ஆடலைத் திருவாலங்காட்டில் ஆடிக் காளியின் கொலை வெறியை நீக்கியவர். 🌹19. கங்கா தரர் – ஆயிரம் நதி வேகத்துடன் விண்ணும் மண்ணும் அழிக்கப் பாய்ந்த கங்கை நதியைத் திருமுடியில் ஏற்று உலகம்காத்த கங்கா நாயகர். பகீரதனுக்காக ஏழு கிளைகளாகப் பிரித்து மண்ணுலகில் விடுத்தவர் கங்கா விமோச்சனர் கங்காதீசுவரர். பரமன் கங்கையை விடுத்த நாளே கங்கா சுநானம் எனப்படும் நீராடும் திருவிழா. முன்னிரவில் நீர் நிரப்புப் பண்டிகை, பின்னிரவில் விடியற்காலையில் கங்கா சுநானம் என்ற தண்ணீர்த் திருவிழாவை அஞ்ஞானிகள் தீபாவளி(தீப வரிசை) என்று தவறாகக்கூறுகின்றனர். எல்லா உலகமும் கடந்த ஈசன் திருமுடியிலிருந்து கங்கை பூமியில் பாய்ந்த போது தெய்வம் முதல் புல் வரை எல்லா சீவராசிக்கும் கங்கா சுநானம் ஆனதால் கங்கா சுநானம் ஆயிற்றா? என்று நலம் விசாரிக்கும் கங்கா சுநானத் திருநாளுக்கும் வட நாட்டில் சத்திய பாமா செய்த நரகாசுர வதத்திற்கும் சம்பந்தம்இல்லை. முகமாக, கை கூப்பிய அம்மனாக, நதியாக ஈசன் முடியில் இருக்கும் புனித கங்கையைப் பெண்ணின் உழிழ் நீராகக் காட்டுவது மிகவும் கீழ்த்தரமான மாபெரும் கொடூர நாத்திகம்,மகா பாவம்,மீளா நரகத்தில் தள்ளும் சிவ நிந்தனை.
⭐20.கல்யாண சுந்தரர் – பராசக்தி மலத்தால் பற்றப்பட்டு தாட்சாயிணி பார்வதி மீனாட்சியாக மற்றும் மீனவ வேடுவ அந்தண மகளாகப் பல பிறவிகளில் பூவுலகில் பிறந்து வளரும் போதெல்லாம் பெருங் கருணையுடன் திருக்காட்சி தந்து திருமணம் செய்துகொண்டு அருளி மீண்டும் தெய்வம் ஆக்கி அருளும் கருணா சாகரன்.
🍀21.சந்திர சேகரர் — முற்றிலும்ஒளி யிழந்து சந்திரன் அழியும் நிலையில் இருந்தபோது பிறை நிலவைத் திருமுடியில் அணிந்து சந்திரனுக்கு வாழ்வு அருளிய பிறை சூடி,சந்திர கலாதரர், சந்திர மௌலி. தற்காலத்தவர்கள் ஆகாயப் பிறை நிலவை மனிதர்கள் உண்டாக்கிய செயற்கைத் தலையலங்கார அழகுப்பொருளாக எண்ணித் தாம் விரும்பும்காமாட்சி மாரியம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்களின் தலையில் சூட்டி ஈசன்அருட்செயலைக் கேலிக்கூத்து ஆக்குகின்றனர். ஏகம்பரைப் பூசிக்கும் அடியார் கோலமே காமாட்சி வடிவம். குறை நிலவைப் பௌர்ணமி யாக்கிவர் பரமசிவன்.பௌர்ணமி நாளோடு பிற தெய்வங்களுக்கு சம்பந்தம் இல்லை. ஈசன் பிறை சூடிய முடியுடன் சந்திரனுக்குக் காட்சி அளித்த தலம் திருவக்கரை சந்திர சேகரர் கோயில்.. பௌர்னமியில் சிவபூசை பல மடங்கு சிறப்பு. சிவப்பிரியா